Saarathy Pammac

எங்களைப்பற்றி

எங்களது நோக்கு

பல வகைகளில் மனவளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகளுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் பாதுகாவலராகவும், கிரியா ஊக்கியாகவும் இருந்து அவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து அவர்தம் வாழ்நாள் முழுவதும் சுபீட்சமான வாழ்வை உறுதி செய்வதும் அவர்தம் குறைகளை துல்லியமாக கண்டு அவைகளை களைய எல்லா முயற்சிகளையும் நடை முறைப்படுத்தி அவர்தம் வாழ்வை வளம் கொழிக்கச் செய்வதே எங்களது நோக்கும் நோக்கமும் ஆகும்.

எங்களது செயல்பாடு

மேற்படி குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு ஒற்றைசைச் சாளரமுறையில் இருந்து அவர்தம் குறைகளை கூர்மையாகக் கண்டு அவற்றைக் களைய அனைத்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கி, அவர்தம் செயல்பாடுகளை மேம்படுத்தி அவர்கள் நல்ல ரீதியில் முன்னேற, அவர்களுக்குள் மேம்பட்டை உயர்த்தி அவர்களுக்கு உகந்த பணிகளைக் கண்டு அவர்தம் வாழ்வை உயர்த்துவதே எங்கள் செயல்பாடாகும்.

மேலும் மாநில, மத்திய அரசுகளால் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் இன்ன பிற உதவிகளை, உரிமைகளை வாதாடிப்பெற்று அவர்களிடம் சேர்த்தல், மற்றும் அரசுக்கு இவர்களின் குறைகளை களைய பரிந்துரைகளை அவ்வப்போது வழங்குதல்.

இக்குழந்தைகள் நலன் கருதி வல்லுனர்களை அழைத்து மருத்துவ முகாம்கள் நடத்துதல், அவர்தம் பெற்றோர் நலன் கருதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளைப் பெறுதல். மற்றொரு முக்கியமான செயல்பாடு இல்லம் திட்டம்.

எங்களைப்பற்றி ஓர் வரியில்

எண்ண இயலாதோர்க்கு எண்ணிலாக்காப்பு (மன வளம் குறைபாடு உடையவர்களுக்கு அளவற்ற பாதுகாப்பு அளித்தல்)

வேண்டுகோள்

நன்கொடைகளை காசோலையாகவோ, வரைவோலையாகவோ கோயமுத்தூரில் பெற்றுக் கொள்ளும்படியாக
SAARATHY-PAMMAC – க்கிற்கு அனுப்பலாம்.

நன்கொடைகளை கீழ்கண்ட சேமிப்புக் கணக்குகளில் ஏதாவது ஒன்றிற்கு ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை மூலமும் அனுப்பலாம்.

SAARATHY-PAMMAC

SB A/C No. : 431806226

Indian Bank

R.S.Puram Branch

Coimbatore, India

IFSC Code: IDIB000R023

இல்லம் திட்டத்திற்காக:

SAARATHY-PAMMAC

SB A/C No. 05470100031265

Bank of Baroda

Coimbatore Main Branch

IFSC: BARB0COIMBA

(Fifth Character is ZERO)