Saarathy Pammac

Flash Announcements, News And Events, Uncategorized

Report on Disabled day Celebrations-2022

          World Disabled Day Celebrations-2022

கடந்த ஞாயிறு (18/12/2022) அன்று சாரதி-பேமேக் அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் தினத்தைக் கொண்டாடியது.
கோவை இராமநாதபுரத்தில் உள்ள திருமதி சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் 150 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளும் அவர்களை பயிற்றுவித்து பாதுகாக்கும் 40 சிறப்பு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இச்சிறப்பு ஆசிரியர்கள் கோவையிலுள்ள கீழ்கண்ட சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.
1. அபூர்வ சங்கமம்
2. Women’s Voluntary Services (WVS) Org.
3. Saadhya
4.STAR Special School
5. Vidya Vikasini Opportunity School
6. Bharathi Rehabilitation Centre
7.Able Hands Day Care Centre
8.Cottolengo Special School
9. Kaumaram Prashanthi Special School
10. ETC, SARRATHY PAMMAC
11. Thulir Therapy Centre
12.Nithilyam Special School
13. AMAZE Special School

இவ்விழாவினை சிறப்பாக நடத்திக் கொடுக்கும் முகமாக PSG Tech EEE Dept மாணவர்கள் 9 பேர் திரு.Tuhin தலைமையில் Volunteer-களாக விழாக் குழுவினருக்கு செவ்வனே உதவி புரிந்தனர்.

இவ்விழாவில் மனவளர்ச்சி குன்றியோருக்கான ஓவியப்போட்டி, மாறுவேடப்போட்டி, மற்றும் சிறப்புப் பள்ளிகளுக்கிடையேயான குழு நடனப்போட்டிகளும் நடைபெற்றன.


போட்டிகளில் வெற்றி பெற்றோரை ஊக்குவிக்கும் முகமாக பரிசுகள் வழங்கப்பட்டன.


இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக  Blessing Catering இரஞ்சித், முதியோர் நல மருத்துவர் Dr.T.தேவராஜன், மற்றும் திரு.ஆனந்த், Proprietor, New Anand Dresses,  இராமநாதபுரம், கோவை ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றோருக்கு பரிசுகளை வழங்கினர்.


மேலும் ஒவ்வொரு வருடமும் மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று சுமார் 350 பேருக்கு மதிய உணவினை உபயமாக வழங்கிடும் திரு.இரஞ்சித், சிறப்புக் குழந்தைகளின் சிறப்பான ஆசிரியர் என்ற மாநில அரசின் விருதினைப் பெற்ற திருமதி.ஜோதி, முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள் திருமதி. விஜயலட்சுமி மற்றும் திருமதி.ரேணுகா, மற்றும் மல்லேகவுண்டன்பாளைத்திலுள்ள சாரதி பேமேக்கின் வளாகத்திற்கு மிகப் பெரியளவிலான  Shed ஒன்றினை உபயமாக அளித்த திருப்பூரைச் சேர்ந்த திரு.மயில்சாமி அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஆறுதல் பரிசும் அனைத்து சிறப்பு ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டன.

 
 

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.