Saarathy Pammac

Flash Announcements, News And Events, Uncategorized

International Day for the Differently Abled – Celebrations-2023

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 03 மற்றும் டிசம்பர் 08 ஆம் தேதிகளில் முறையே உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தினமும் மனவளர்ச்சி குன்றியோர் தினமும் அனுசரிக்கப்பட்டு விழாவாக கொண்டாடுகிறார்கள். 

கோவையிலுள்ள சாரதி பேமேக் என்ற பெற்றோர் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் கிருஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய ஞாயிறன்று அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினவிழாவினை கொண்டாடுகிறது.

இவ்வாண்டு இவ்விழா கடந்த ஞாயிறன்று (17/12/2023) கோவை இராமநாதபுரத்திலுள்ள திருமதி சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபத்தில் சிறப்பாகக் கொண்டாடியது.

இவ்விழாவில், கோவையிலுள்ள 9 சிறப்புப் பள்ளிகள்/மையங்களைச் சேர்ந்த 120 சிறப்புக் குழந்தைகள் கலந்து கொண்டனர். இவர்களுடன் இவர்தம் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறப்புக் குழந்தைகளுக்குக்கான ஓவியப்போட்டி மற்றும் மாறுவேடப் போட்டி நான்கு பிரிவுகளில் (5 வயதும் அதற்கு கீழும், 6-10, 11-15, 16 வயதும் அதற்கு மேலும்) நடத்தப்பட்டன. மேலும் சிறப்புப்பள்ளிக்கான குழு நடனப் போட்டிகளும், தனித்துவ கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இறுதியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் Rtn.அஸ்வின் குமார், President, Rotary Club Central, Coimbatore, கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற சிறப்புக் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட அனைத்து சிறப்புக் குழந்தைகளுக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

மேலும் இச்சிறப்புகளைத் தயார் செய்வதில் உள்ள சவால்களையும் மீறி தயார் செய்த சிறப்பு ஆசிரியர்களுக்கும் நினைவப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்விழா செவ்வனே நடைபெற உதவிய நடுவர்கள் (ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர்கள் திரு.குமணன், திரு.இளங்கோவன், மற்றும் திரு.முருகேசன்), தன்னார்வலர்களாகக் கலந்து கொண்ட PSG Tech EEE மற்றும் KMCH Occupational Therapy மாணவர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது

Worldwide December 03 and December 08 are celebrated as the Day for the Disabled and the Day for the Mentally Challenged, respectively.

SAARATHY-PAMMAC, Parents Association of persons with Mental retardation, Multiple disabilities, Autism, and Cerebral palsy, Coimbatore, celebrated International Day for the Differently Abled on the Sunday before every Christmas.

For this year, it was celebrated on 17/12/2023 (Sunday) at Thirumathi Saraswathi Natarajan Thirumana Mandapam, Ramanathapuram, Coimbatore. In this 120 Special Children /Persons from 9 different special schools/centres in Coimbatore participated. Along with these special children, their special teachers and their parents also participated.

There were Drawing and Fancy Dress Competition among these in four categories of ages, namely, 5 and below, 6-10, 11-15, and 16 and above. Apart from these, school-wise  Group Dance Programmes and Individual Talent Shows were also part of the day long celebration.

At the end, winners were given away prizes by the Chief Guest, Rtn.Ashwin Kumar, President, Rotary Club Central. All the participants were given either a Prize or a Participation Gift.

Momentoes were also given to the Special Teachers, the Judges (Mr.Kumanan, Mr.Elangovan, and Mr.Murugesan all of whom are retired Drawing Teachers) and Volunteers from PSG Tech-EEE and KMCH Occupational Therapy Students, who were mainly responsible for the smooth conduct of the show.

The celebration came to a close after National Anthem.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.